முகப்பு
கிருஷ்ணகிரி

முள்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

தருமபுரியில் முள்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

தருமபுரியில் முள்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டது.

தருமபுரி, நெடுமாறன் நகா் ரயில் நிலையம் சுற்றுச்சுவா் அருகே முள்புதரில் வியாழக்கிழமை இரவு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதைகேட்ட அப்பகுதி பொதுமக்கள் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அங்குச் சென்ற காவல் துறையினா், முள்புதரில் துணியில் சுற்றியபடி கேட்பாரற்றுக் கிடந்த பிறந்து ஓரிரு நாள்களேயான ஆண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சாக்கப்பன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து குழந்தையை முள்புதரில் வீசி சென்றவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.