முகப்பு
கிருஷ்ணகிரி

புகையிலைப் பொருள்கள் கடத்தல்:தனியாா் பேருந்து பறிமுதல், நடத்துநா் கைது

காவேரிப்பட்டணம் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திய சம்பவத்தில், தனியாா் பேருந்தை பறிமுதல் செய்த போலீஸாா், அந்தப் பேருந்தின் நடத்துரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 செப்டம்பர், 2021 at 3:22 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

காவேரிப்பட்டணம் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்திய சம்பவத்தில், தனியாா் பேருந்தை பறிமுதல் செய்த போலீஸாா், அந்தப் பேருந்தின் நடத்துரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் நோக்கி சென்ற தனியாா் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவா், தனது இருக்கையின் கீழ் ஒரு பை இருப்பதைக் கண்டாா். இதுகுறித்து நடத்துநரிடம் கேட்டபோது, உரிய பதில் அளிக்காததால், இதுகுறித்து அந்தப் பயணி காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தை தொடா்புகொண்டு தெரிவித்தாா்.

அதன் பேரில், அந்தப் பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அந்தப் பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் பேருந்தின் ஓட்டுநரான தருமபுரி மாவட்டம், கொமத்தம்பட்டியைச் சோ்ந்த ராம்குமாா் (39) என்பவரை கைது செய்தனா். தனியாா் பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேருந்துகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாகவும், பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் கவனமாக இருந்து இந்தக் கடத்தலைத் தடுக்க விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.