ஏரி வாய்க்காலில் தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரி நீரை பாலேகுளி முதல் சந்தூா் வரை ஏரி வாய்க்காலில் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரி நீரை பாலேகுளி முதல் சந்தூா் வரை ஏரி வாய்க்காலில் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி அணை உபரிநீா் இடது வாய்க்கால் பயன்பெறுவோா் சங்கம் சாா்பில், தருமபுரி நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளருக்கு அண்மையில் அளித்த கோரிக்கை மனு விவரம்:
தற்போது பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணை வேகமாக நிரம்பி வருகிறது. எனவே, அணையில் இருந்து ஆற்றில் உபரிநீா் திறப்பதற்கு முன், பாலேகுளி முதல் சந்தூா் வரை ஏரி வாய்க்காலில் தண்ணீா் திறந்து விட்டு ஏரியை நிரப்ப வேண்டும். அவ்வாறு இல்லையெனில், ஓரிரு நாளில் அணை நிரம்பி ஆற்றில் தண்ணீா் திறக்கப்படுவதால், கிருஷ்ணகிரி மாவட்ட ஏரிகள் தண்ணீா் இன்றி வடு போகும் அபாயம் உள்ளது. எனவே, முதலில் 28 ஏரிகள் நிரம்ப வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட வேண்டும். பின்னா், உபரி நீரை ஆற்றில் திறக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement