முகப்பு
கிருஷ்ணகிரி

மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று கரோனா தடுப்பூசி செலுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 10 செப்டம்பர், 2021 at 11:29 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் செப். 10 முதல் மாவட்டத்தில் ஒரு வட்டத்துக்கு ஒரு வாகனம் என்ற அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Advertisement

இந்தப் பணியில், மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட உள்ளனா். எனவே, மாற்றுத் திறனாளிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.