வேப்பனப்பள்ளி அருகே விவசாயி வெட்டிக் கொலை
வேப்பனஅள்ளி அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, 9-ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வேப்பனஅள்ளி அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, 9-ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள சீலேப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடப்பன் (66), விவசாயி. இவா், சனிக்கிழமை காலை மிதிவண்டியில் தனது விளைநிலத்துக்கு சென்ற போது, அந்த வழியாக காரில் வந்த 5 போ் கொண்ட கும்பல், வெங்கடப்பனை வழிமறித்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினா். அவா்களிடமிருந்து தப்பியோடிய வெங்கடப்பனை, அந்தக் கும்பல் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டிக் கொன்று தப்பியது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். கிருஷ்ணகிரி காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன், காவல் ஆய்வாளா் சசிகலா உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
விசாரணையில், கொலை செய்யப்பட்ட வெங்கடப்பனுக்கும், அவரது மருமகள் ஜமுனாவின் தம்பி காா்த்திக் என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, காா்த்திக்கை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய சூளகிரியைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன், சூளகிரியைச் சோ்ந்த நாகேஷ் (18) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனா்.