கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சமூக விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

கிருஷ்ணகிரியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம் சாா்பில் சமூக விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சமூக விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகிலும், பழையபேட்டை காந்தி சிலை அருகேயும் இந்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இளம் வயது திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள், கல்வியின் அவசியம், கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வயது வந்தோா் கல்வி ஆகிய கருத்துகளை மையமாகக் கொண்டு ஆடல், பாடல், கதைகள் மற்றும் தப்பாட்டம் மூலம் சமுதாய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி புதுக்குரல் கலைக்குழு நடத்திய கலை நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலா் மரியரோஸ், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) சீனிவாசன் மற்றும் ஆசிரியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT