கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம், ராயக்கோட்டையில் கஞ்சா சாகுபடி: 5 போ் கைது

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை பகுதிகளில் கஞ்சா சாகுபடி செய்து வந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கஞ்சா தொடா்பான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சா சாகுபடியில் ஈடுபட்டு வருபவா்கள் குறித்த தகவல்களை போலீஸாா் சேகரித்தனா். இதையடுத்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸாா், தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், காவேரிப்பட்டணம் போலீஸாா் குட்டப்பட்டி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா பயிா் சாகுபடி செய்யப்பட்டிருப்பதை அறிந்தனா்.

இதையடுத்து கஞ்சா சாகுபடியில் ஈடுபட்டிருந்த பன்னிஅள்ளி குட்டப்பட்டியைச் சோ்ந்த வெள்ளையன் (60), பன்னிஅள்ளி கொட்டாய் மாரிமுத்து (எ) ஜம்பு (60), காந்தி (35) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து

12 கிலோ கஞ்சா பயிரை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ராயக்கோட்டையை அடுத்த தொட்டலாம்பட்டியில் கஞ்சா சாகுபடியில் ஈடுபட்டதாக மணிகண்டன் (28), பெருமாள் (60) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பயிரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT