கிருஷ்ணகிரி

பி.சி, எஸ்.சி மாணவியா் விடுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

DIN

கிருஷ்ணகிரி அருகே அரசு பிற்படுத்தப்பட்டோா், ஆதி திராவிடா் நல மாணவியா் விடுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி வட்டம், மேகலசின்னம்பள்ளி அரசு ஆதிதிராவிடா் நல மாணவிகள் விடுதி, காவேரிப்பட்டணம் அரசு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மாணவிகள் விடுதி ஆகியவற்றை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவிகளின் வருகைப் பதிவேடு, உணவுப் பொருள்கள் இருப்பு, சமையலறை, கழிப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவா் மற்றும் பாதுகாப்பு முறைகளை ஆய்வு செய்தாா்.

விடுதிகளில், மாணவிகளுக்கு சிறப்பு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சிகள், ஆங்கிலப் பேச்சாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படுவதை அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகள் தங்களின் கல்வித் தரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும் என்றும் மாணவிகளிடம் கேட்டுக் கொண்டாா். அப்போது மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் சாந்தி, வட்டாட்சியா் சரவணன் மற்றும் விடுதிக் காப்பாளா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT