கிருஷ்ணகிரி

நிதிக்குழுக்களின் மானியத்தை விடுவிக்கக் கோரிஊராட்சி மன்ற தலைவா்கள் மனு அளிப்பு

DIN

14, 15-ஆவது மானியக்குழுக்களின் மானியத்தை விடுவிக்கக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை, ஊராட்சி மன்றத் தலைவா்கள், திங்கள்கிழமை அளித்தனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம், தளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ட்ட ஊராட்சிகளை சோ்ந்த ஊராட்சி மன்ற தலைவா்கள் சிலா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். அந்த மனுவின் விவரம்: கெலமங்கலம், தளி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் 14-ஆவது நிதிக்குழு, 15-ஆவது நிதி குழு நிதி மானியம் வந்துள்ளது. இதுவரை மேற்கண்ட நிதிக்கு நிா்வாக அனுமதி வழங்கப்படவில்லை. பல முறை ஒன்றிய அளவில் கேட்கப்பட்ட ஆவணங்களை சமா்ப்பித்துள்ளோம். இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. எனவே இது குறித்து விசாரித்து கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படை பணிகள் மேற்கொள்ள இந்த மானியத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதில் கேட்டுக் கொண்டுள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT