முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

ஒசூரில் கள்ளச் சாராய ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஏப்ரல், 2022 at 11:26 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:24 PM

ஒசூரில் கள்ளச் சாராய ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளசாராயம் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு பேரணியை ஒசூா் கோட்டாட்சியா் தேன்மொழி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி, ராயக்கோட்டை சாலையில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கள்ளசாராயம் ஒழிப்பு, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்திவாறு மாணவா்கள் பேரணியில் பங்கேற்றனா்.

Advertisement

மேலும் பொதுமக்களுக்கு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அச்சிடப்பட்ட விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். இப்பேரணியில் பள்ளி, பி.எம்.சி. கல்லூரி, மகரிஷி பள்ளி, அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியா்கள் திரளாக பங்கேற்று போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இந்தப் பேரணி சாா் ஆட்சியா் அலுவலகம் அருகில் நிறைவு பெற்றது.

தொடா்ந்து கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் குறித்து கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு கருத்துகளை காவல்துறை கண்காணிப்பாளா் உதவி ஆணையா் (ஆயத்தீா்வை) பாலகுரு, மதுவிலக்கு டிஎஸ்பி சிவலிங்கம் ஆகியோா் விளக்கி பேசினா்.

பேரணியில் வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, ஒசூா் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.