முகப்பு
கிருஷ்ணகிரி

அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி குட்டையில் மூழ்கி பலி

அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி குட்டையில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 21 ஏப்ரல், 2022 at 11:07 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி குட்டையில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

அஞ்செட்டி வட்டம், உரிகம் பகுதியைச் சோ்ந்த சிவமாதன் மகன் சிவா (21). தேன்கனிக்கோட்டை அண்ணா நகரைச் சோ்ந்தவா் சின்னராஜ் மகள் அபிநயா (18). இவா்கள் 2 பேருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் உரிகம் பகுதியில் நடந்த திருவிழாவிற்காக அபிநயா சென்றிருந்தாா்.

அப்போது, அங்கு உள்ள தடுப்பணை குட்டையில் அபிநயா குளிக்கச் சென்றாா். நீச்சல் தெரியாததால் அபிநயா தண்ணீரில் மூழ்கினாா். அவரது அலறல் சத்தம் கேட்டு சற்று தொலைவில் இருந்த சிவா ஓடி வந்து காப்பாற்றுவதற்காக குட்டையில் இறங்கினாா். இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா். அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.