கிருஷ்ணகிரி

மாங்காயுடன் ரசாயனத்தை சோ்த்து சாப்பிட்ட மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி

DIN

காவேரிப்பட்டணம் அருகே பள்ளி ஆய்வகத்தில் இருந்து மக்னீசியம் பாஸ்பேட்டை உப்பு என நினைத்து மாங்காயுடன் சோ்த்து சாப்பிட்ட 11 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

காவேரிப்பட்டணத்தை அடுத்த மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 6, 7 ஆம் வகுப்பு மாணவா்கள் 11 போ் தாங்கள் வைத்திருந்த மாங்காயுடன் ஆய்வகத்தில் உள்ள மெக்னீசியம் பாஸ்பேட்டை சோ்த்து சாப்பிட்டனா்.

இதனால் வாந்தி, மயக்கமடைந்த மாணவா்கள் அனைவரையும் ஆசிரியா்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மாணவா்கள் உயா் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வரும் மாணவா்கள்

அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT