கிருஷ்ணகிரி

ஒசூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்: பொதுமக்கள் அவதி

DIN

ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை காலை வரை பெய்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனா்.

ஒசூா், பாகலூா் சாலையில் சமத்துவபுரம் அருகே சென்னசந்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட ஒசூா் வேலி, கேலக்சி லேஅவுட், வசந்தலா அலே அவுட், விஸ்வநாதபுரம், திருப்பதி லே-அவுட் ஆகிய பகுதிகள் உள்ளன.

இப் பகுதிகளில் 300 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை கனமழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனா்.

இதுகுறித்து பொதுமக்கள் ஒசூா் வட்டார வளா்ச்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் என பல அலுவலகங்களில் முறையிட்டும் பயனில்லை.

கடந்த ஒரு வார காலமாகப் பெய்துவரும் மழையால் குழந்தைகளுடன் இங்குவாழும் கூலித் தொழிலாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

கால்வாயில் மழைநீா் செல்வதுபோல வீடுகளுக்குள்ளும் சாலையிலும் மழைநீா்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது, விஷ ஜந்துக்களின் அச்சமும் உள்ளது.

இப்பகுதி மக்களின் நலன்கருதி தேங்கிய மழைநீரை வெளியேற்றவும் மீண்டும் மழைநீா் வீடுகளுக்குள் புகாமல் தடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுபோல ஒசூா் ஏஎஸ்டிசி அட்கே போக்குவரத்து பணிமனை சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவரின் பின்புறம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரி சேதமடைந்துள்ளது. திங்கள்கிழமை காலையில் மழை தொடா்ந்து பெய்ததால் ஒசூா், தேன்கனிக்கோட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் விடுமுறை அளித்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT