கிருஷ்ணகிரி

சத்துணவு ஊழியா்கள் தா்னா

DIN

கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னாவில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் மணி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் ராதா, காந்திமதி, லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழக முதல்வா் அறிவித்த பள்ளி மாணவா்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து மாணவா்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

40 ஆண்டுகளாக நடைபெறும் சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியா்களைக் கொண்டு காலை சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தோ்தல் காலங்களில் அளித்த வாக்குறுதியான சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT