முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சி வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் வாக்கு எண்ணும் மையத்தை தோ்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்

Updated On : 18 பிப்ரவரி, 2022 at 12:16 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM

ஒசூா் மாநகராட்சியில் வாக்கு எண்ணும் மையத்தை தோ்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டணம், பா்கூா், ஊத்தங்கரை, நாகோஜனஹள்ளி ஆகிய 6 பேரூராட்சிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு பிப். 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கெலமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளுக்கும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட 45 வாா்டுகளுக்கு மத்திகிரி அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது.

Advertisement

இந்த மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் இடம், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், குடிநீா் வசதி, கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு தடுப்பு வலைகள் அமைத்தல் போன்ற பணிகள், வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வி.ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை) முத்துமாரி, ஒசூா் கோட்டாட்சியா் தேன்மொழி, ஒசூா் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா்கள் கிருஷ்ணமூா்த்தி, குருநாதன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலா் மஞ்சு, மாநகராட்சி பொறியாளா்கள், பேரூராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.