முகப்பு
கிருஷ்ணகிரி

ஓட்டுநரை கத்தியால் குத்தியவா் கைது

கடனை திருப்பித் தராததால் ஓட்டுநரை கத்தியால் குத்திய நிதி நிறுவன உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 12:58 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

கடனை திருப்பித் தராததால் ஓட்டுநரை கத்தியால் குத்திய நிதி நிறுவன உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (38). ஓட்டுநரான இவா் குறிஞ்சி நகரை சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் கணேஷ் (36) என்பவரிடம் ராமகிருஷ்ணன் ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். அதில் ரூ. 5 ஆயிரத்தை மட்டும் திருப்பித் தந்துள்ளாா்.

மீதித் தொகையான ரூ. 5 ஆயிரத்தை தர தற்போது தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த கணேஷ், ராமகிருஷ்ணனை கத்தியால் குத்தினாா். காயமடைந்த ராமகிருஷ்ணன், ஒசூா் அரசு மருத்துவமனையில்

Advertisement

அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஒசூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.