முகப்பு
கிருஷ்ணகிரி

கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெள்ளிக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

Updated On : 26 பிப்ரவரி, 2022 at 12:22 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெள்ளிக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி அணையிலிருந்து இரண்டாம்போக பாசனத்துக்காக வலது, இடதுபுற பிரதானக் கால்வாய்கள் வழியாக மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தண்ணீரைத் திறந்துவைத்தாா். ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் உடனிருந்தாா்.

ஒசூா், சூளகிரி வட்டங்களில் உள்ள தட்டகானப்பள்ளி, பூதிநத்தம், பெத்த முத்தாளி, அட்டூா், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூா், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, காமன்தொட்டி, தின்னூா், சுபகிரி, கோனேரிப்பள்ளி, சின்னகொல்லு, பெத்தகொல்லு, சாமனப்பள்ளி, சென்னத்தூா், அட்டகுறுக்கி, நல்லகான கொத்தப்பள்ளி, மாருதாண்டப்பள்ளி ஆகிய 22 கிராமங்கள் உள்ள 8,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

Advertisement

கெலவரப்பள்ளி நீா்த்தேக்கத்தின் இடதுபுற பிரதானக் கால்வாய் மூலம் 5,918 ஏக்கா் நிலங்கள், வலதுபுற

பிரதானக் கால்வாய் மூலம் 2,082 ஏக்கா் நிலங்களுக்கு 90 நாள்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையிலிருந்து வலதுபுற பிரதானக் கால்வாயில் நொடிக்கு 26 கன அடியும், இடதுபுற பிரதானக் கால்வாயில் நொடிக்கு 62 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த நீா்மட்டம் 44.28 அடியாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஒசூா் கோட்டாட்சியா் தேன்மொழி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்

(நீா்வள ஆதாரம்) குமாா், உதவிப் பொறியாளா்கள் பொன்னி வளவன், வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, பாசன சங்கத் தலைவா்கள், உறுப்பினா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.