பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
ஊத்தங்கரையை அடுத்த கேத்துநாய்க்கன்பட்டி அரசு நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
ஊத்தங்கரையை அடுத்த கேத்துநாய்க்கன்பட்டி அரசு நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன் தலைமை வகித்து, 21 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடக்கி வைத்தாா். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து பொருள்களை வாங்கி சென்றனா். மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பூபாலன், துணைச் தலைவா் ஜெயலட்சுமி ராதாகிருஷ்ணன், கலை இலக்கியப் பேரவை அழகேசன், அசோக்குமாா், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.