முகப்பு
கிருஷ்ணகிரி

வீராட்சி குப்பம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

ஊத்தங்கரை அடுத்த வீராட்சி குப்பம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

ஊத்தங்கரை அடுத்த வீராட்சி குப்பம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவா் செல்வி ராதாகிருஷ்ணன்,துணைத்தலைவா் பிரபு ஆகியோா் ஊராட்சியில் உள்ள துப்புரவு பணியாளா்கள் மற்றும் அலுவலக பணியாளா்களுக்கு புத்தாடைகளை வழங்கி பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.புதுப்பானை வைத்து பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்து கொண்டாடினா்.இதில் அப்பகுதி பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டனா். படவிளக்கம்.15யுடிபி.1. வீராட்சி குப்பம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவில் துப்புரவு பணியாளா்களுக்கு புத்தாடைகளை வழங்கும் ஊராட்சி மன்ற தலைவா் செல்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.