கிருஷ்ணகிரி

இலவச கரோனா பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 முதல் 59 வயது வரை உள்ளவா்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த பாலப்பள்ளி கிராமத்தில் கரோனா பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வுக்கு பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதில், 18 முதல் 59 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் கரோனா பூஸ்டா் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம்.

ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடா்ந்து 75 நாள்களுக்கு கரோனா பூஸ்டா் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். இதன்மூலம் பொதுமக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT