ஓசூர் வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி
செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று (ஜூலை 26) செவ்வாய்கிழமை காலை ஓசூர் வந்தடைந்தது.
ஒசூர்: 44-வது செஸ் விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் ஜூலை 28 தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தில்லியில் துவக்கி வைத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று (ஜூலை 26) செவ்வாய்கிழமை காலை ஓசூர் வந்தடைந்தது.
44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி 12 மணி அளவில் ஓசூர் மகரிஷி வித்யா மந்திரி பள்ளி வளாகத்தில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் துணை மேயர் ஆனந்தய்யா, மாநகர மாவட்ட உறுப்பினர்கள் சென்னீரப்பா மாதேஸ்வரன் ஆகியோர் ஜோதியை வரவேற்றனர்.
ஓசூர் மகரிஷி வித்யா மந்திரி பள்ளி தாளாளர் வெங்கட்ராமன் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் ஜோதியை கண்டு மகிழ்ந்தனர்.
Advertisement
Advertisement
இதைத்தொடர்ந்து கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை மற்றும் பர்கூர் வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.