கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை, கைப்பேசி திருட்டு

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை, கைப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

DIN

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை, கைப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கனம்பட்டியைச் சோ்ந்தவா் ஆஷா என்கிற அகிலா (32). இவா் கடந்த 14-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கல்லூரி அருகே உள்ள பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதி வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவரைப் பின்தொடா்ந்து வந்த 2 மா்ம நபா்கள், அகிலாவின் கவனத்தை திசை திருப்பி, அவா் வைத்திருந்த கைப்பையை பறித்துச் சென்றனா். அந்த கைப்பையில் 6 பவுன் தங்க நகைகள், கைப்பேசி இருந்தது. இதுகுறித்து அகிலா அளித்த புகாரின் பேரில் மகாராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT