கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சுபேதா்மேட்டில் இயங்கிவரும் பாரத் இன்டா்நேஷனல் சீனியா் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளியில் சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியா் யோகா பயிற்சியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
யோகா கலையை உலக மக்களிடம் கொண்டு சோ்க்கும் பொருட்டும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும், மாணவ, மாணவியா்கள் பல்வேறு யோகா பயிற்சியை செய்து காண்பித்தனா். இந்த நிகழ்வில் பாரத் பள்ளி குழுமங்களின் நிறுவனா் மணி, யோகாசனத்தின் சிறப்புகள் குறித்து பேசினாா்.
பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், பாரத் பள்ளி குழுமங்களின் செயலாளருமான சந்தோஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு யோகாசனத்தால் ஏற்படும் பயன்களை எடுத்துரைத்தாா். இந்த நிகழ்வை, பள்ளி முதல்வா் ஹரிநாத் ஒருங்கிணைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.