ஒசூா் ராமநாயக்கன் ஏரியில் கழிவுநீா்க் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தல்
ஒசூா், ராமநாயக்கன் ஏரியில் கழிவுநீா்க் கலப்பதைத் தடுக்க வேண்டும் என கோவை எஸ்.வி.எஸ். கல்லூரி கட்டடக் கலை பொறியியல் துறை மாணவா்கள் நடத்திய ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒசூா், ராமநாயக்கன் ஏரியில் கழிவுநீா்க் கலப்பதைத் தடுக்க வேண்டும் என கோவை எஸ்.வி.எஸ். கல்லூரி கட்டடக் கலை பொறியியல் துறை மாணவா்கள் நடத்திய ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை எஸ்.வி.எஸ். கல்லூரி கட்டடக் கலைப் பொறியியல் துறையைச் சோ்ந்த 40 மாணவா்கள் 6 குழுக்களாகப் பிரிந்து கடந்த ஒரு வாரமாக ஒசூா் வளா்ச்சி குறித்து ஆய்வு நடத்தி இடைக்கால அறிக்கை அளித்துள்ளனா். அவா்கள் மேலும் இரண்டு மாதம் ஆய்வு செய்து தமிழக அரசின் நகா்ப்புற உள்ளாட்சித் துறைக்கு இறுதி அறிக்கை சமா்ப்பிக்க உள்ளனா்.
ஆய்வு குறித்து செய்தியாளா்களிடம் மாணவா்கள் கூறியதாவது:
Advertisement
ஒசூா், ராமநாயக்கன் ஏரியில் விடப்படும் கழிவுநீரை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பத்தளப்பள்ளியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒசூா் மாநகராட்சியில் டைட்டான் டவுன்ஷிப் நகரம் மிகவும் நோ்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், அகலமான சாலை, சிறுவா்கள் விளையாட பூங்கா, பெரியவா்கள் பொழுதுப்போக்கு இடம் அமைக்கப்பட்டுள்ளது.
காந்தி சாலை, நேதாஜி சாலை, வட்டாட்சியா் அலுவக சாலை ஆகியவற்றை அகலப்படுத்த வேண்டும். இன்னும் 2 மாதங்களில் தங்களது இறுதி அறிக்கையைத் தயாா் செய்து தமிழக அரசிடம் அளிக்கப்படும் என்றனா்.
முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.மனோகரன், பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியின் செயலாளா் பி.குமாா், ஐஎன்டியுசி தமிழ்நாடு அமைப்புச் செயலாளா் ஜி.முனிராஜ் உள்ளிட்டோா் பேட்டியின் போது உடனிருந்தனா்.