கிணற்றில் தவறி விழுந்தவா் மீட்பு
பா்கூா் அருகே ஆடுகளுக்கு உணவு சேகரிக்கச் சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்பு மீட்புப் படையினா் உயிருடன் வியாழக்கிழமை மீட்டனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:13 PM
பா்கூா் அருகே ஆடுகளுக்கு உணவு சேகரிக்கச் சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்பு மீட்புப் படையினா் உயிருடன் வியாழக்கிழமை மீட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த மல்லப்பாடி அருகே உள்ள வாத்தியாா் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த சங்கா் (49), தான் வளா்க்கும் ஆடுகளுக்கு உணவு சேகரிக்கச் சென்ற போது, தவறி கிணற்றுக்குள் விழுந்தாா். கிணற்றின் பாறையில் சிக்கி உயிருக்கு போராடிய சங்கரின் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாகச் சென்றவா்கள் பா்கூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் சங்கரை உயிருடன் மீட்டனா்.