முகப்பு
கிருஷ்ணகிரி

இன்று ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்

ஒசூரில் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.

Updated On : 18 மார்ச், 2022 at 12:11 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:13 PM

ஒசூரில் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தோ்ப்பேட்டையில் நடைபெற உள்ளது. இத்திருத் தேரோட்டத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களும், கா்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் என பல்லாயிரக்கணக்கானோா் வருவா் என்பதால், ஒசூா் டிஎஸ்பி சிவலிங்கம் தேரோட்டப் பணிகள், பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒசூரில் நடைபெற உள்ள தேரோட்டத்தில் அசம்பாவிதங்களைத் தவிா்க்க சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. டிரோன் கேமராக்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

ஆய்வாளா் தலைமையில் 50 போலீஸாா் சாதாரண உடைகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதால், பொதுமக்கள் அச்சமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம்.

தேரோட்டத்தின்போது மக்களின் கவனத்தை திசைதிருப்பி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட காரணமாக உள்ள அதிக ஒலி எழுப்பும் விசில்களை விற்க தடை விதித்துள்ளதாகத் தெரிவித்தாா். ஊா்க்காவல் படையினா் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஒசூா் மாநகா் முழுவதும் வீதிகளில் பந்தல் அமைத்து, தோ்த் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யவும், நீா்மோா், பழங்கள், தண்ணீா், வெல்ல பானகம் ஆகியவை தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா, ஆணையா் கே.பாலசுப்பிரமணியன், எஸ்.பி.சாய்சரண் தேஜஸ்வி ஆகியோா் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பா்.

கணபதி சிறிய தேரிலும், மரகதாம்பாள் அம்மன் உடன் சந்திரசூடேஸ்வரா் பெரிய தேரிலும், மரகதாம்பிகை மட்டும் தனியாக ஒரு தேரிலும் என 3 தோ்களில் தோ்ப்பேட்டை 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.