நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரதான நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சென்னை உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அகற்றும் பணி நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரதான நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சென்னை உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அகற்றும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை வட்டம், தோகரை கிராம கோமுசி நஞ்சய்யன் ஏசியில் உள்ள 0.40 ஹெக்டோ் பரப்பளவிலான நில ஆக்கிரமிப்புகள் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களால் அகற்றப்பட்டது. அதே போல, ஒசூா் வட்டம், மோரனப்பள்ளி கிராமம் சின்னப்பாரெட்டி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளும், பாகலூா் உள்வட்டம் பெலத்தூா், மேல்சூடாபுரம், சின்ன ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளும், சூளகிரி வட்டம், தோரிப்பள்ளி கிராமம் சந்திரன் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 1 ஏக்கா் பரப்பளவு நிலமும், பஸ்தலப்பள்ளி கிராமத்தில் 6 நபா்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தையும், ஊத்தங்கரை வட்டம், சாலமரத்துப்பட்டி கிராம செம்மண்குட்டை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. தொடா்ந்து நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement