முகப்பு
கிருஷ்ணகிரி

எருது விடும் விழா: மாடு முட்டி மாணவா் பலி

 ஒசூா் அருகே எருது விடும் விழாவில், மாடு முட்டியதில் 10-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 25 மார்ச், 2022 at 12:12 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:16 PM

 ஒசூா் அருகே எருது விடும் விழாவில், மாடு முட்டியதில் 10-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

ஒசூா் அருகேயுள்ள சப்படி கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி எருது விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டு வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த விழாவைக் காண 2,000-த்துக்கும் மேற்பட்டோா் கூடியிருந்தனா்.

இந்த நிலையில், சப்படி கிராமத்தை அடுத்துள்ள கானலட்டி கிராமத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் செம்பப்பா மகன் திவாகா், நண்பா்களோடு விழாவைக் காண சென்றாா்.

Advertisement

அப்போது, சீறிப்பாய்ந்து வந்த காளை திவாகரை முட்டி தள்ளி தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சூளகிரி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.