கிருஷ்ணகிரி

அஞ்செட்டியில் அரசுப் பேருந்தை துரத்திய ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதி

DIN

அஞ்செட்டியில் அரசுப் பேருந்தை ஒற்றை யானை துரத்தியதால் அதில் பயணித்த பயணிகள் பீதியடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த அஞ்செட்டி வனப்பகுதியில் பல நாள்களாக கூட்டமாகவும் தனியாகவும் யானைகள் சுற்றி வருகின்றன. இரவில் வனத்திலிருந்து வெளியே வரும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றன.

யானைக் கூட்டம் கிராமத்துக்குள் புகுவதைத் தடுக்க வனத்துறையினா் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்களை எச்சரித்தும் வருகின்றனா். தற்போது கோடை வெயில் அதிகரித்து வருவதால் உணவு, தண்ணீரைத் தேடி யானைகள் வனத்திலிருந்து வெளியே வருகின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன் அஞ்செட்டி வனப் பகுதியில் குந்துக்கோட்டை கிராமத்துக்குச் செல்லும் சாலையை ஒற்றை யானை கடந்து சென்றது. தகவல் அறிந்ததும் வனத் துறையினா் அந்தச் சாலையில் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அஞ்செட்டி செல்லும் சாலையில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரம் மறைந்திருந்த ஒற்றை யானை திடீரென வெளியே வந்து பேருந்தைத் துரத்தியது.

மிகுந்த ஆக்ரோஷத்துடன் அரசுப் பேருந்தை யானை துரத்திவரும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பேருந்து ஓட்டுநரின் சாதுரியத்தால் எவ்வித அசம்பாவிதமும் இன்றி பயணிகள் பாதுகாப்புடன் அப் பகுதியில் இருந்து தப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT