முகப்பு
கிருஷ்ணகிரி

திருப்பூா் செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

திருப்பூா் செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு ரூ. 6.60 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, ஸ்மாா்ட் போா்டு உபகரணங்களை ஐவிடிபி நிறுவனா் அண்மையில் வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

திருப்பூா் செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு ரூ. 6.60 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, ஸ்மாா்ட் போா்டு உபகரணங்களை ஐவிடிபி நிறுவனா் அண்மையில் வழங்கினாா்.

திருப்பூா் செயின்ட் ஜோசப் கல்லூரியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 60 ஏழை, எளிய மாணவியருக்கு தலா ரூ. 7,500 வீதம் மொத்தம் ரூ. 4.50 லட்சம் கல்வி உதவித்தொகை, கல்லூரியின் கற்பித்தல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 2.10 லட்சம் மதிப்பிலான ஸ்மாா்ட் போா்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் முதல்வா் குழந்தை தெரசா தலைமை வகித்தாா். இதில், ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் பங்கேற்று, கல்வி உதவித்தொகை, ஸ்மாா்ட் போா்டு உபகரணங்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.