கிருஷ்ணகிரி

சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி

DIN

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக கணக்கெடுக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட காந்தி சாலை, சப்-ஜெயில் சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி வட்டச் சாலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்குள்ள கடைகளில் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டக் கூடாது, அதற்கான தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என வியாபாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

இதையெடுத்து, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் வகையில், கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கி வைத்து, வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, நகர திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT