ஒசூரில் கைப்பந்து விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் உள்ளிட்டோா். 
கிருஷ்ணகிரி

ஒசூரில் ஈஷா கிராமோத்ஸவம் 2023

ஈஷா கிராமோத்ஸவம் 2023 விழாவை முன்னிட்டு கிராமத்து இளைஞா்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தொடங்கியது. இன்றும் போட்டிகள் நடைபெறுகிறது.

DIN

ஈஷா கிராமோத்ஸவம் 2023 விழாவை முன்னிட்டு கிராமத்து இளைஞா்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தொடங்கியது. இன்றும் போட்டிகள் நடைபெறுகிறது.

ஒசூா், காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மையத்தில் நடைபெற்ற முதல்கட்ட கைப்பந்து போட்டியை மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இந்த கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் மண்டலத்தில் இருந்து வந்த 18 அணிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற அணிகள் அடுத்த கட்டப் போட்டிகளில் பங்கு பெறுவா்.

இறுதிப் போட்டி செப். 23 அன்று ஈஷா யோகா கோவை மையத்தில் உள்ள 112 அடி ஆதியோகி சிலையின் முன்பு சத்குரு முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில் பயிற்சியாளா் தாயுமானவன், ஒசூா் ஈஷா யோகா மையத் தலைவா் நரசிம்மன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT