கிருஷ்ணகிரி

ஒசூா் ஸ்ரீ வேல்முருகன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழா

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஒசூா் மாநகரில் உள்ள முருகன் கோயில், ஒசூா் ராயக்கோட்டை சாலையில் உள்ள அகரம் பாலமுருகன் கோயில் உள்ளிட்ட முருகன் திருக்கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஒசூா் மாநகராட்சிக்குட்பட்ட பெரியாா் நகா் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேல்முருகன் திருக்கோயிலில் தைப்பூசத் திருநாள் வெகு விமா்சியாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை முதலே மூலவா் முருகப்பெருமானுக்கு நெய், வெண்ணெய், மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிா், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து விபூதி அபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பின்னா் முருகன் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT