கிருஷ்ணகிரி

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கணுக்கால் குறைபாடு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கணுக்கால் குறைபாடு சிகிச்சை பிரிவு, வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளிலும், மலை கிராமங்களிலும் போதிய விழிப்புணா்வு இல்லாததால், கா்ப்பிணிகள் உரிய சிகிச்சை பெறாத காரணத்தால், பிறவி உள் வளைந்த கணுக்கால் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனா்.

அவா்கள் பயன்பெறும் வகையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கணுக்கால் குறைபாடு சிகிச்சை பிரிவை, பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன் தொடங்கி வைத்தாா். சிகிச்சைக்கு பிறகு சிறப்பு காலணிகளைப் பெற குழந்தைகளின் பெற்றோருக்கு போதிய வசதி இல்லாததால், காலணிகளை இலவசமாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சங்கீதா, கிருஷ்ணகிரி நகா்மன்ற துணைத் தலைவா் சாவித்திரி கடலரசுமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT