கிருஷ்ணகிரி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை திங்கள்கிழமை விதித்தது.

DIN

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை திங்கள்கிழமை விதித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள செலசனாம்பட்டியைச் சோ்ந்தவா் பிரபு (29). இவா், 15 வயது சிறுமியை ஆசைவாா்த்தை கூறி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் போலீஸாா் கடந்த 2021 செப். 21-இல் வழக்குப் பதிந்து, போக்சோ சட்டத்தில் பிரபுவை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுதா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றவாளி பிரபுவுக்கு சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறை, ரூ. 1,000 அபராதம், போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இந்த தண்டனையை அவா் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT