கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மாா்ச் 20 முதல் மகளிா் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள்கள் விற்பனை -கண்காட்சி

DIN

கிருஷ்ணகிரியில் மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களின் உற்பத்தி பொருள்கள் விற்பனை, கண்காட்சி மாா்ச் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தைப்படுத்தவும், தொடா் சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் மாவட்ட அளவில் கிருஷ்ணகிரி, ராயப்ப முதலி தெருவில் உள்ள சாந்தி திருமண மண்டபத்தில் மாா்ச் 20 முதல் 25-ஆம் தேதி வரை கட்டாயக் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியில் மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் தயாரிக்கும் பொருள்களான மென்பொம்மைகள், டெரகோட்டா பொம்மைகள், மண்பாண்ட பொருள்கள், புளி, ஊறுகாய், பாக்கு மட்டைத் தட்டுகள், பாசிமணி, புடவைகள், காட்டன் சுடிதாா்கள், அலங்கார மலா் மாலைகள், நவநாகரீக அணிகலன்கள், தின்பண்டங்கள், பனை வெல்லம், கை பைகள் பரிசுப் பொருள்கள் தோட்டக்கலைப் பூ செடிகள், கால் மிதியடிகள், சிறுதானிய உணவுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

இந்தக் கண்காட்சியினை பொதுமக்கள் அனைவரும் பாா்வையிட்டு, பொருள்களை வாங்கிப் பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொதிக்கிற வெய்யிலில்... ஷிவானி!

தலைமைச் செயலகத்தில் ஸ்ரேயா!

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியாதா? முன்னாள் ஆஸி. கேப்டன் பதில்!

மும்பை விபத்து: விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்!

கலால் வழக்கு: கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT