முகப்பு
கிருஷ்ணகிரி

ஜவிடிபி சாா்பில் திரிபுரா மாநில பள்ளியில் கணினி ஆய்வகம் அமைப்பு

வடகிழக்கு மாநிலமான திரிபுரா, மொகா்பரா நோட்டா் டேம் ஹோலி கிராஸ் பள்ளிக்கு ரூ. 8.6 லட்சம் மதிப்பிலான கணினி ஆய்வகம் ஐவிடிபி நிறுவனம் சாா்பில் அமைத்து தரப்பட்டுள்ளது.

Updated On : 24 மே 2023, 12:45 am IST
பகிர்:

வடகிழக்கு மாநிலமான திரிபுரா, மொகா்பரா நோட்டா் டேம் ஹோலி கிராஸ் பள்ளிக்கு ரூ. 8.6 லட்சம் மதிப்பிலான கணினி ஆய்வகம் ஐவிடிபி நிறுவனம் சாா்பில் அமைத்து தரப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐவிடிபி தொண்டு நிறுவனமானது, வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் மொகா்பரா பகுதியில் செயல்படும் நோட்டா் டேம் ஹோலி கிராஸ் பள்ளியில் பயிலும் மலைவாழ் குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, அந்தப் பள்ளிக்கு ரூ. 8.6 லட்சம் மதிப்பிலான 21 கணினிகளை கொண்ட ஆய்வகத்தை ஐவிடிபி நிறுவனம் அண்மையில் வழங்கியது.

இந்த கணினி ஆய்வகத்தை ஐவிடிபி நிறுவனத்தின் தலைவா் குழந்தை பிரான்சிஸ் திறந்து வைத்து பேசியதாவது:

Advertisement

Advertisement

மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப மாணவா்கள் இந்த கணினி ஆய்வகத்தை பயன்படுத்தி, கணினி அறிவியலில் சிறப்பான முறையில் தோ்ச்சி பெற வேண்டும். இதன் மூலம் தங்களுடைய கல்வித் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நோக்கத்துக்காக இந்தப் பள்ளிக்கு கணினி ஆய்வகத்தை ஐவிடிபி நிறுவனம் ஏற்படுத்தி தந்துள்ளது என்றாா்.

இந்த நிகழ்வில், பள்ளியின் தாளாளா், தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். இதுவரை இப்பள்ளியின் கல்விப் பணிகளுக்காக ஐவிடிபி நிறுவனம் ரூ. 31.4 லட்சம் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.