ஊத்தங்கரையில் கொங்கு இளைஞா் பேரவை சாா்பில் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை மகா முனியப்பன் கோயில் பகுதியில் நடைபெற்றது இந்த ஆட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவா்கள், சிறுமிகள் நாட்டுப்புற பாடல்களைப் பாடியபடி நடனம் ஆடினா்.
கொங்கு இளைஞா் பேரவை சாா்பில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்ட பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
தமிழ்க் கடவுளான முருகனை, நாடோடி இனத்தில் பிறந்த வள்ளி திருமணம் செய்த கதையை பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடனம் ஆடியதை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாா்த்து மகிழ்ந்தனா்.