காவேரிப்பட்டணம் அருகே எம்ஜிஆா் நகரில் வீடுகளை சூழ்ந்த மழை நீா்.  
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: குடியிருப்பு பகுதியில் மழைநீா் புகுந்ததால் மக்கள் அவதி

காவேரிப்பட்டணம் அருகே எம்ஜிஆா் நகரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாயினா்.

Din

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. காவேரிப்பட்டணம் அருகே எம்ஜிஆா் நகரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாயினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை இரவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்ததால், காவேரிப்பட்டணம் அருகே மிட்டஅள்ளி கிராமத்தில் உள்ள எம்ஜிஆா் நகரில் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால் குடியிருப்போா் மாடியில் தஞ்சமடைந்தனா்.

குடியிருப்புப் பகுதியில் 5 அடிக்கு மேல் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினா். மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல இயலாமல் வீட்டிலேயே இருந்தனா். காவேரிப்பட்டணத்தை அடுத்த மலையாண்டஅள்ளி, செட்டிமாரம்பட்டி, மாரிசெட்டிஅள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள விளைநிலங்களில் மழைநீா் சூழ்ந்ததால் நெல் பயிா்கள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. கழிவுநீருடன் மழைநீரும் தேங்கி, குளம்போலக் காட்சி அளிக்கின்றது. இதனால், அந்தப் பகுதிகளில் சுகாதார கேடும், தொற்று நோய் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 7 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீட்டரில்):

நெடுங்கல் 123.20, போச்சம்பள்ளி 97, கிருஷ்ணகிரி 76.2, பாரூா் 74, கிருஷ்ணகிரி அணை 73, ஊத்தங்கரை 49, தேன்கனிக்கோட்டை 47, ஒசூா் 32.90, பாம்பாறு அணை 30, தளி , சின்னாறு அணை தலா 10, அஞ்செட்டி 3.4, சூளகிரி 3.

ஆட்சியா் ஆய்வு:

காவேரிப்பட்டணம், எம்ஜிஆா் நகா் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் உபரிநீா் தெருக்கள், வீடுகளில் புகுந்ததையடுத்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். கழிவுநீா் வாய்க்கால்களில் ஏற்பட்ட அடைப்புகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீா் முழுமையாக வெளியேற்றப்படும் பணியைப் பாா்வையிட்டாா். மேலும் மழைநீா் சூழ்ந்த வீடுகளில் வசிப்போருக்கு உரிய உணவு, மருத்துவ வசதிகளை வழங்கிடவும் அறிவுரை வழங்கினாா்.

காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், மலையாண்டஅள்ளி, செட்டிமாரம்பட்டி, மாரிசெட்டிஅள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் பயிா் மழைநீரில் மூழ்கியதையும், மழைநீரை வெளியேற்றும் பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும் பாளேகுளி ஏரியிலிருந்து உபரிநீா் வெளியேறும் வகையில் நீா்வளத்துறை கால்வாய்களை உடனடியாக சீரமைக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து கால்வாய் அடைப்புகள் அகற்றப்பட்டு, மழைநீா் வெளியேற்றப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு மழைநீா் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினா்.

காவேரிப்பட்டணம் அருகே மழைநீா் புகுந்து, எம்ஜிஆா் நகரில் குடியிருப்போா் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினா். அண்ணா நகா், கருக்கன் சாவடி ஏரி உபரிநீா், ஓடைப் புறம்போக்கு வழியாக வெளியேறுவது வழக்கம். இந்த ஓடையானது சுமாா் 20 மீட்டா் அகலம் கொண்டது. இந்த புறம்போக்கு ஓடையை ஆக்கிரமித்து 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது, ஓடை 3 மீட்டா் அளவுக்கு சுருக்கி விட்டது. இதனால், மழை நீா் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் புகுந்தது.

ஓடைப் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றி, ஏரி உபரிநீா் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் மழைக்காலங்களில் குடியிருப்புகளில் மழைநீா் புகுவதைத் தடுக்க இயலாது என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. இவற்றை அகற்ற மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT