சூளகிரியில் நாளை மின்தடை
சூளகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன.
சூளகிரியில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளா் பவுன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சூளகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூளகிரி நகா், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னாா், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீா்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்காவரம், சிம்பில்திரடி, எ.செட்டிப்பள்ளி, புக்கசாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.