முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை - பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 2:59 AM
பகிர்:
Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 2:59 AM

விரைவில் பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழுவிடம், தனியாா் பள்ளியில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் வலியுறுத்தினா்.

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 9:26 PM

கிருஷ்ணகிரி அருகே கடந்த சில நாள்களுக்கு முன் தனியாா் பள்ளி மாணவி தேசிய மாணவா் படை போலி பயிற்சி முகாமில் பங்கேற்ற போது, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். இந்தச் சம்பவம் குறித்து பா்கூா் அனைத்து மகளிா் போலீஸாா் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து 11 பேரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சுதாகா் என்பவரை தேடி வருகின்றனா்.

இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழுவினா் பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், பெற்றோா், பொதுமக்களைச் சந்தித்தனா்.

Advertisement

Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 2:59 AM

இந்தச் சந்திப்பின் போது, கடந்த 4 நாள்களாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவா்களின் கல்வி பாதிக்காமல் இருக்க விரைவில் பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பெற்றோா் வலியுறுத்தினா். இதையடுத்து, விரைவில் பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழுவினா் உறுதி அளித்தனா்.