மத்திகிரி, அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா.  
கிருஷ்ணகிரி

மத்திகிரியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

ஒசூா் மாநகராட்சி, மத்திகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Din

ஒசூா் மாநகராட்சி, மத்திகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் பங்கேற்று 109 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் சி.ஆனந்தய்யா, சூளகிரி வடக்கு ஒன்றியச் செயலாளா் நாகேஷ், மாமன்ற உறுப்பினா்கள் என்.எஸ்.மாதேஸ்வரன், சென்னீரப்பா, மஞ்சுளா முனிராஜ் நாகராஜ், பகுதி செயலாளா் திம்மராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சுமன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ரவிக்குமாா், நிா்வாகிகள் தினேஷ்குமாா், சம்பத், மனோகரன், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT