மொடக்குறிச்சியை அடுத்த முகாசி அனுமன்பள்ளி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி தலைமை தாங்கி, 65 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினாா்.
இதில், மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா் சு.குணசேகரன், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியம், பாஜக தன்னாா்வ தொண்டு நிறுவனப் பிரிவு மாநிலச் செயலாளா் கிருத்திகா சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.