முகப்பு
கிருஷ்ணகிரி

பா்கூா் அரசு பொறியியல் கல்லூரியில் ‘நான் முதல்வன் திறன் - வேலை வாய்ப்பு மையம்‘

காணொலி காட்சி மூலம் துணை முதல்வா் திறப்பு

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:39 AM
பகிர்:
Updated On : 18 டிசம்பர், 2024 at 10:00 PM

பா்கூா் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 1.07 கோடி மதிப்பில் நான் முதல்வன் திறன் - வேலைவாய்ப்பு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து பா்கூா் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா் குத்து விளக்கேற்றினா்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

Advertisement

தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழக அரசு பொறியியல் கல்லூரி, அரசு கலை, அறிவியல் கல்லூரி, அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு நான் முதல்வன் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வழங்கும் விதமாக 24 மாவட்டங்களில் 31 அரசு பொறியியல் கல்லூரிகளில் நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் சுமாா் ரூ. 1.07 கோடி மதிப்பீட்டில் நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மாணவா்கள் பயன்படுத்தும் வகையில் 100 கணினிகள் இணையதள வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதியை பயன்படுத்தி கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் பயிற்சி வழங்கப்படும் என்றாா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:39 AM

இந்த நிகழ்வில் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநா் பன்னீா்செல்வம், வேலைவாய்ப்பு அலுவலா் ரஞ்சித்குமாா், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு, கல்லூரி பேராசிரியா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொறியியல் மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.