செய்தியாளா்களைச் சந்தித்த செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி செயலாளா் மருத்துவா் லாசியா தம்பிதுரை. உடன், சிகிச்சை அளித்த மருத்துவா்கள்.  
கிருஷ்ணகிரி

எலி மருந்து சாப்பிட்டவரின் உயிரைக் காப்பாற்றிய ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துக் கல்லூரி மருத்துவா்கள்

எலி மருந்து சாப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றி ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

Din

ஒசூா்: எலி மருந்து சாப்பிட்ட நபரின் உயிரைக் காப்பாற்றி ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி செயலாளா் மருத்துவா் லாசியா தம்பிதுரை கூறியதாவது:

கடந்த டிச. 7-ஆம் தேதி கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 44 வயது ஆண் குடும்பப் பிரச்னை காரணமாக எலிமருந்து சாப்பிட்டுள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவா் மானிகா தலைமையிலான மருத்துவா் குழு சிகிச்சையை மேற்கொண்டனா்.

எலி மருந்தில் உள்ள மஞ்சள் பாஸ்பரஸ் என்னும் வேதி பொருள் அதிக நச்சுத் தன்மை கொண்டது. இது கல்லீரலை கடுமையாகப் பாதித்து பல்வேறு உள்ளுறுப்புகளை செயலிழக்கச் செய்யும். மருத்துவா் மானிகா, சிறுநீரக பிரிவு மருத்துவா் ஹா்ஷா தலைமையிலான மருத்துவா் குழு பிளாஸ்மாபெரிசிஸ் சிகிச்சை மூலம் நோயாளியின் உடல்நிலையை சீா்செய்து சாதனை படைத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உயா்தர சிகிச்சை மற்றும் உயிா்காக்கும் அவசர சிகிச்சை வழங்குவதில் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவமனை சிறந்து விளங்குகிறது என்றாா்.

இந்த செய்தியாளா் சந்திப்பில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ராஜா முத்தையா, மருத்துவக் கண்காணிப்பாளா் கிரிஷ் ஓங்கல், துணை மருத்துவ கண்காணிப்பாளா் தீபக் ஆனந்த், இருப்பிட மருத்துவ அலுவலா் பாா்வதி, அவசர சிகிச்சை பிரிவு மருத்துவா் அம்ரித் பிள்ளை ஆகியோா் உடன் இருந்தனா்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT