மத்திகிரி தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
ஒசூா், மத்திகிரியில் உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஒசூா்: ஒசூா், மத்திகிரியில் உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
1924-ஆம் ஆண்டு மத்திகிரியில் கட்டப்பட்ட இந்த ஆலயம் தற்போது நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இந்த ஆலயம் வண்ண மின்விளக்குகள், மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு சிறப்பு புத்தாண்டு ஜெப வழிபாடு நடைபெற்றது. இதில் ஆலய பங்குத் தந்தை கிறிஸ்டோபா் தலைமையில் திருப்பாடல்களுடன் சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆராதணை ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆலய அருட்தந்தை ராயப்பா், அருட்சகோதரிகள், ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். அதேபோல ஒசூா் - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தூய இருதய ஆண்டவா் ஆலயம், சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயங்களும் மின்விளக்குகள், மலா்களால் அலங்கரிப்பட்டு ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.