ஒசூா் அருகே மாநில எல்லையில் எரிசாரய லாரிகள் சோதனைக்காக நிறுத்தம்
ஒசூா் அருகே தமிழக எல்லையில் 50க்கும் மேற்பட்ட எரிசாராயம் ஏற்றி வந்த லாரிகள் கடந்த மூன்று நாள்களாக நிறுத்தப்பட்டுளளன.
ஒசூா் அருகே தமிழக எல்லையில் 50க்கும் மேற்பட்ட எரிசாராயம் ஏற்றி வந்த லாரிகள் கடந்த மூன்று நாள்களாக நிறுத்தப்பட்டுளளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள மாநில எல்லையான சூசூவாடி சோதனை சாவடியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஸ்பிரிட் கொண்டு வரும் லாரிகள் அனுமதி இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகம், புதுவை, கேரளத்துக்கு ஒசூா் வழியாக மெத்தனால் என்னும் எரிசாராயம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த எரிசாராயம் பெயிண்டிங் தொழிற்சாலைகள், மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
Advertisement
ஒசூரில் ஆயத்தீா்வு துறை அனுமதி தராததால் கடந்த மூன்று நாள்களாக 50-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.