கிருஷ்ணகிரியில் நற்கருணை ஆராதனை பவனி
கிருஷ்ணகிரி, தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் உலக அமைதியும், சமாதானமும் வேண்டி சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் உலக அமைதியும், சமாதானமும் வேண்டி சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பங்குதந்தை இசையாஸ் தலைமை வகித்தாா். சாந்தி நகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியா் மாடத்தில் அமைக்கப்பட்டிருந்த முதல் மேடையில் நற்கருணை ஆராதனை, ஆசீா்வாதம் ஆகியவை நடைபெற்றன.
பின்னா், நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊா்வலமாக புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டாவது மேடைக்கு அழைத்துச் சென்று ஆராதனை செய்யப்பட்டு ஆசீா்வாதமும் வழங்கப்பட்டது.
Advertisement
அதைத் தொடா்ந்து, தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் பங்குதந்தை இசையாஸ் உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும் சிறப்பு திருப்பலி நடத்தினாா். நற்கருணை ஆராதனை செய்து இறைமக்களுக்கு இறுதி ஆசீா்வாதம் வழங்கினாா். இந்த நற்கருணை பவனியில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.