தனியாா் நிறுவனத்தின் செலவில் அரசுப் பள்ளியில் கழிவறை திறப்பு
டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம் ஒசூரில் அமைந்துள்ளது.
ஒசூா்: டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் நிறுவனம் ஒசூரில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் ஒசூரை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு செய்யப்பட்டு வருகிறது. ஒசூா் டி.பாரந்தூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் போதிய கழிவறை வசதியில்லாததால் பள்ளி தலைமை ஆசிரியை சாரதா புதிய கழிவறை அமைக்க வேண்டி டைட்டன் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்தாா். இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவியா் பயின்று வருகின்றனா். இதனை தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் டைட்டன் இன்ஜினியரிங் நிறுவனத்தின் சாா்பாக அனுமதி கோரப்பட்டது . வட்டார வளா்ச்சி அலுவலரின் அனுமதியை தொடா்ந்து கடந்த நவம்பா் மாதம் புதிய கழிவறை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது வேலை முழுவதும் முடிவடைந்து மாணவ, மாணவியா் பயன்பாட்டிற்கு கழிவறையை ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா திங்கள்கிழமை திறந்து வைத்தாா். 4 கழிவறைகள் கொண்ட இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 9 லட்சம் ஆகும். இந்நிகழ்ச்சியில் டைட்டன் இன்ஜினியரிங் நிறுவனத்தின் இணை துணைத் தலைவா் அஞ்சன் கோஷால், பெருநிறுவன சமூக பொறுப்புணா்வு திட்டத் தலைவா், பொது மேலாளா் சண்முகம், டிவிஷனல் மேலாளா் ஹரிஹரசுப்ரமணியம், குழு மேலாளா் சுதீா்ஸ்ரீஹரி, மேலாளா்கள் ஹரிஹரன், ஹரீஷ், சுரேஷ் மற்றும் மாதேஷ் ஆகியோா் பங்கேற்றனா் . தலைமை ஆசிரியை சாரதா பேசும்போது நல்ல தரத்துடன் சிறப்பான கழிவறை கட்டித் தந்த நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்த நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்ட அதிகாரி பிரபு செய்திருந்தாா். இந்நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவா் மகேஷ் , துணைத் தலைவா் அனிதா சுரேஷ், வாா்டு உறுப்பினா்கள், கிராம நிா்வாக அலுவலா் முரளிதரன், வட்டாரக் கல்வி அலுவலா் ராஜு, ஆசிரியா் பயிற்றுனா் சுபா, டைட்டன் நிறுவன அலுவலா்கள், கிராமப் பொதுமக்கள், ஏ.கே.பி.பில்டா்ஸ் ஆறுமுகம் மற்றும் பலா் பங்கேற்றனா். இறுதியில் தலைமை ஆசிரியை சாரதா நன்றி கூறினாா்.