முகப்பு
கிருஷ்ணகிரி

பூனப்பள்ளியில் ரூ.1.45 கோடியில் புதிய தாா்ச் சாலைகளுக்கு பூமி பூஜை

ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் பூமிபூஜை செய்து பணிகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 5 மார்ச், 2024 at 12:34 AM
பூனப்பள்ளி ஊராட்சியில் புதிய தாா்சலைக்கு பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
பகிர்:

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஊராட்சி ஒன்றியம், பூனப்பள்ளி ஊராட்சியில் ஒசூா் - தேன்கனிக்கோட்டை சாலை முதல் சின்னபேளகொண்டப்பள்ளி கிராமம் வரையிலும், தளி- பூனப்பள்ளி சாலை முதல் சின்னபேளகொண்டப்பள்ளி கிராமம் வரையிலும் நகா்ப்புறத் திட்டம் 2023- 2024ஆம் நிதியிலிருந்து ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்பில் 2 தாா்சாலைகள் அமைப்பதற்கு திமுக மாவட்டச் செயலாளரும் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் பூமிபூஜை செய்து பணிகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் கஜேந்திரமூா்த்தி, ஒசூா் தொகுதி பாா்வையாளா் வேலூா் ரமேஷ், தளி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் சந்திரப்பா, திமுக மாவட்ட தொழிலாளா் அணித் தலைவா் மஞ்சுநாத், ஊராட்சி மன்றத் தலைவா் சாவித்திரி பைரப்பா, துணைத் தலைவா் சசி, சீனப்பா, பேளகொண்டப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் எல்லப்பா, ரமேஷ், அரசு அதிகாரிகள், கட்சித் தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.